சிங்கப்பூர் சலூன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்! – Zee Hindustan தமிழ்
Singapore Saloon Assessment: இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்க ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, கிஷன் தாஸ், சத்யராஜ், லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுகுமாரன் ஒளிப்பதிவு, செல்வா எடிட்டிங் மற்றும் ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். சிங்கப்பூர் சலூன் படத்திற்காக ஆர்ஜே பாலாஜி செய்த பிரமோஷனல் மற்றும் படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
மேலும் படிக்க | தங்கர் பச்சான் இயக்கிய ஆவணப்படத்தை பார்த்துள்ளீர்களா? இங்கு பாருங்கள்!
ஆர்ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் ஊரில் சிங்கப்பூர் சலூன் எனும் சலூனை வைத்திருக்கும் லாலை ஆர்.ஜே பாலாஜிக்கு சிறுவயதிலிருந்தே அதிகம் பிடிக்கிறது, மேலும் அவரை பார்த்து ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். பின்பு தனது அப்பாவின் ஆசைக்கிணங்க இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்கிறார். அதன் பிறகு சென்னையிலேயே ஒரு மிகப்பெரிய சலூனை திறக்க முயற்சி செய்கிறார். இதற்காக நிறைய பணமும் தேவைப்படுகிறது, இறுதியில் அவர் ஆசைப்பட்ட படி சிங்கப்பூர் சலூனை திறந்தாரா? அதில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதே இந்த படத்தின் கதை.
#SingaporeSaloon from twenty fifth Jan !!! pic.twitter.com/O7HSovQ0Rk
— RJ Balaji (@RJ_Balaji) January 22, 2024
சிங்கப்பூர் சலூன் படத்தை முதல் பாதி – இரண்டாம் பாதி என இரண்டாக பிரிக்கலாம். படம் ஆரம்பத்திலிருந்து இடைவெளி வரை நான் ஸ்டாப்பாக காமெடி சரவெடிகளாக இருந்தது. குறிப்பாக ஆர்.ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு சிறுவர்கள் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அவர்கள் வரும் காட்சி முழுக்கவே சிரிப்பலைகள் நிறைந்து இருந்தது. ஆர் ஜே பாலாஜியின் மாமனாராக வரும் சத்யராஜ் மற்றும் சகலையாக வரும் ரோபோ சங்கர் இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டாக்கள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதுவும் குறிப்பாக இடைவெளிக்கு முன் பாரில் நடக்கும் ஒரு காட்சிக்கு அரங்கமே அதிரும் அளவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியது. அதில் சத்யராஜின் நடிப்பு அட்டகாசம்.
ஆர்ஜே பாலாஜி தனது வழக்கமான நடிப்பில் இருந்து விலகி சற்று வித்தியாசமான, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனாலும் சில இடங்களில் அந்த ஹைபிட்ச் வந்துவிடுகிறது. கதாநாயகி மீனாட்சி சவுத்ரிக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். இவர்களை தவிர லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். முன்பு சொன்னது போல படம் இரண்டு பாகங்களாக உள்ளது. முதல் பாதியை ஒருவர் இயக்கியது போலவும், இரண்டாம் பாதியை வேறு ஒருவர் இயக்கியது போலும் உள்ளது. படத்தின் முதல் பாதி எவ்வளவு சிறப்பாக இருந்ததோ இரண்டாம் பாதி அவ்வளவு மோசமாக இருந்தது.
கதை எங்கு செல்கிறது என்று புரியாமல் இருக்கிறது இரண்டாம் பாதி. தேவையே இல்லாமல் பல காட்சிகள் இரண்டாம் பாதியில் உள்ளது. ஜீவா, அரவிந்த்சாமி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கேமியோ ரோலில் வந்த போதிலும் இரண்டாம் பாதியை அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை. அதுவும் குப்பத்து பசங்கள் டிவி நிகழ்ச்சியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதாக இடம்பெறும் காட்சிகள் எல்லாம் கிரிஞ்சாகவே இருந்தது. படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக கிளிகள் இருக்கிறது, ஆனாலும் அது சம்பந்தமான காட்சிகளில் சிஜி படுமோசமாக உள்ளதால் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லை. ஒரு பெரிய சலூன் கடைக்கு சென்று மொட்டை அடித்தது போல் இருந்தது சிங்கப்பூர் சலூன்.
மேலும் படிக்க | விஜய் மகனுக்காக அஜித் செய்த உதவி! அடடா..என்னா மனுஷன்யா..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Hyperlink: https://bit.ly/3AIMb22
Apple Hyperlink: https://apple.co/3yEataJ
Adblock check (Why?)