80S Buildup Review: நடிகர்கள் இருக்குற அளவுக்கு நகைச்சுவை இல்லையே.. 80ஸ் பில்டப் விமர்சனம்! – Filmibeat Tamil

bredcrumb

Opinions

oi-Mari S

|

Up to date: Friday, November 24, 2023, 15:50 [IST]

நடிகர்கள்: சந்தானம், ராதிகா ப்ரீத்தி

இசை: ஜிப்ரான்

இயக்கம்: கல்யாண்

நேரம்: 2 மணி நேரம் 7 நிமிடங்கள்

Ranking:

2.0/5

Star Forged: சந்தானம், ராதிகா ப்ரீத்தி

Director: கல்யாண்

சென்னை: குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, சுந்தர்ராஜன், கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்தர், மயில்சாமி, கூல் சுரேஷ், முனீஷ்காந்த் என ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ளனர்.

ஆளுக்கொரு காமெடி செய்து கலக்கினாலே படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும். ஆனால், இயக்குநர் எந்தவொரு காமெடி நடிகரையும் சரியாக வேலை வாங்காத நிலையில், படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படு போராக போய் தலைவலியை தான் உண்டாக்குகிறது.

Santhanams 80S Buildup Full Movie Review in Tamil

சந்தானம் படத்தை பார்க்க சிரிப்பதை எதிர்பார்த்தே மக்கள் தியேட்டருக்கு செல்லும் நிலையில், அதற்கும் பஞ்சம் வைத்தால் எப்படி என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

80ஸ் பில்டப் கதை: கரன்ட் ஷாக் அடித்து சந்தானத்தின் தாத்தா சுந்தர்ராஜன் உயிரிழந்து விடுகிறார். அவரது சாவுக்கு வரும் ஹீரோயின் ராதிகா ப்ரீத்தியை இழவு வீட்டு காரியங்கள் முடிவதற்குள் கரெக்ட் செய்ய முடியுமா என சந்தானத்தின் சகோதரி பெட் கட்ட அதில் சந்தானம் ஜெயித்தாரா? தோற்றாரா? என்பதை 80ஸ் பேக்டிராப்பில் படு பில்டப்பாக எடுத்துள்ளனர்.

நடிகர்கள் இருக்காங்க நகைச்சுவை இல்லை: லொள்ளு சபா டீம் போல சந்தானம் படத்தில் ஒட்டுமொத்த காமெடி நடிகர்கள் உயிரோடு இருப்பவர்கள், மறைந்தவர்கள் என ஒரு பட்டாளமே நடித்திருந்தாலும் சந்தானம் சொல்வது போலவே கோவம் வர்ற மாதிரியே காமெடி பண்ணி கடுப்பாக்கி விடுகின்றனர்.

எம தர்மன், சித்ரகுப்தன்: செத்துப் போன தாத்தாவை கூட்டிக் கொண்டு செல்ல எம தர்மனாக கே.எஸ். ரவிகுமார் வருவதும் இழவு வீட்டில் நடக்கும் காதல் போட்டியை பார்த்து தாத்தா கடுப்பாவதும் என காட்டி ரசிகர்களை கடுப்பாக்கி விடுகிறார் இயக்குநர் கல்யாண். செம இன்ட்ரெஸ்டிங்காக வந்திருக்க வேண்டிய படத்தில் எல்லாமே மிஸ் ஆகி சொதப்பி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பிளஸ்: வழக்கம் போல இந்த படத்திலும் கெட்டப் மற்றும் ஹீரோ லுக் என சந்தானம் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளார். ஆனால், அவரை தவிர மற்ற அனைவருமே நான் சின்க்கில் செல்வதால் திரைக்கதையையும் படத்தையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. சில காமெடிகள் சிரிக்க வைக்கின்றன. பாடல்கள் சற்றே ஆருதல் ரகம்.

மைனஸ்: மன்சூர் அலி கான் புதையல் தேடுவது போல வந்து செய்யும் போர்ஷன் எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. அதே போல போட்டியில் தோற்று விட்டால் மீசை எடுக்க வேண்டும், சேலை கட்ட வேண்டும் என்றும் சொல்வதும், ஏகப்பட்ட கிரிஞ்ச் தனமான விஷயங்களும் ஆனந்த்ராஜ் பெண் வேடத்தில் வரும் போர்ஷன் என அனைத்துமே படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

English abstract

Santhanam’s 80S Buildup Full Film Evaluation in Tamil

Adblock check (Why?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Bollywood Divas Inspiring Fitness Goals

 17 Apr-2024 09:20 AM Written By:  Maya Rajbhar In at this time’s fast-paced world, priori…